Haiku kavithaigal
"ஆயிரம் வலிகள் நீ அடைந்தாலும்.
உன் இலக்கில் குறியாக இரு."
"மெளனமாக காத்து இரு.
இலக்கை எட்டிய பிறகு பேசு."
"நினைவுகள் எப்போதும் அழகானது .
அதை பத்திரமாக பட்டயம் செய்து வைத்துக்கொள்."
"நேரம் என்பது உயிர் போன்றது .
உன் உயிரை யாருக்கும் விட்டு கொடுக்காதே"
"காத்திருந்து பெறும் எந்த பொருளும்.
உன் மீது காதலை வெளிப்படுத்தும் மறவதே"
"நதியில் நீந்தும் மீனை பார் .
வழி தெரியாத நதியில் தன் வழித்தடம் பதித்த அழகை பார்"
"எல்லோரும் நல்லவர்கள் தான் .
நீ அவர்களிடம் கையேந்தும் வரை"
"தினமும் வாழ்வில் போராடும் ஏழையும் .
கடவுள் தான்"
"அவள் மறக்க சொல்கிறாள்
மனம் அவளை நினைக்க சொல்கிறது"
"எல்லோரும் ஒரு நாள் மறைந்து போவோம்
அதற்கு முன் சில நினைவுகளை பகிர்ந்து செல்வோம்"
"பூக்கடை முழுவதும் வாசம் தான்
அதை விற்பவள் வாழ்வில் மட்டும் வாசம் இல்லை"
"தெருக்கள் தோறும் தோரணம்
அதை வேடிக்கை பார்க்க வீதிக்கு வரும் சாமி"
"ஆயிரம் வலிகள் இருந்தாலும்
அவள் முகமே வலி தீர்க்கும் மருந்து"
"எனக்காக யாரும் இல்லை
அவளுக்காக நான் இருக்கிறேன்"
"தீர்க்க முடியாத பிரச்சினைகள் கூட
அவள் கடைவிழியில் கரைந்து ஓடும்"
"விலிகளை மட்டுமே பார்த்து வளர்ந்தவள்
இன்று தான் முதல் முறை சிரிக்கிறாள்"
"அவள் கண்ணுக்குழி மட்டும் ஏன்
காந்தம் போல் ஈர்க்கிறது "
"அவளுக்கும் எனக்கும் ஆன பந்தம்
பாவாடைக்கும் நாடாவுக்கம் இருக்கும் உறவு போன்றது"
"அவள் மெளனம் மட்டும் ஏன்
என் இதயத்தை சாகடிக்கிறது"
"தெருக்கள் தோறும் தோரணம்
அதை வேடிக்கை பார்க்க வீதிக்கு வரும் சாமி"
"தெருக்கள் தோறும் ஒரே சலசலப்பு
அவள் தோகை விரித்து நடணமாடும் கதகதப்பு"
"யாரும் பார்க்காத காட்சி
அவளுக்கு எனக்குமே சாட்சி"
"அவள் அழகு மிதக்கும் நிலவைவிட அழகு
மந்தாரை பூவு ஒன்னு மனசுக்குள் பூத்த நிகழ்வு"
"அவள் கருப்பட்டியாய் இனிக்கிறாள்
அவளிடம் நான் நித்தம் தேனீர் அருந்துகிறேன்"
"நெஞ்சு முடியில் கொஞ்சி பேசும் இளம் தளிரே
மிஞ்சி மிதிச்சி மனைவியாய் வருவது எப்போது "
"காய்ந்த ஓடையில் மழைச்சாரல்
அவள் இதழ் பொழிந்தது பெரும் மழை"
"கண்ணீர் துதும்புதடி
கண்ணே உன் கருவரை கதை கேட்டு"
"ஒருநாள் கனவாகி போனேதே
அவள் ஒரு நிமிட பார்வை"
"பூக்களே வாருங்கள்
என்னவள் பொன் சிரிப்பை பாருங்கள்"
"தித்திக்கும் தேன்மொழி உன் வாசம் போதை ஏற்றுதடி
மயங்கிடக்கும் எனக்கு உன் மடியில் இடம் தருவாயா"
No comments: